சிறையில் இருந்தபடி கன்னடம் கற்று வருகிறார் சசிகலா..!

சிறையில் இருந்தபடி கன்னடம் கற்று வருகிறார் சசிகலா..!

சிறையில் இருந்தபடி கன்னடம் கற்று வருகிறார் சசிகலா..!
Published on

சிறையில் கன்னட மொழியை கற்றுவரும் சசிகலா விரைவில் தொலைதூரக் கல்வி மூலம் கன்னட மொழி தொடர்பான படிப்பிலும் சேர உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் சசிகலா. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தனது கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம் மற்றும் காலமான நேரங்களில் பரோலில் வெளிவந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் சிறை வாழ்க்கை வாழ்ந்து வரும் அவர் தற்போது சிறையில் கன்னட மொழியை நன்றாகவே கற்றுக் கொண்டுள்ளார். சிறையில் சக கைதிகளுடன் கன்னட மொழியிலேயே பேசுவதாக தகவல். இதனையடுத்து பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைத்தூர கல்வி மூலம் கன்னட மொழி தொடர்பான படிப்பில் சேர சசிகலா உள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு தொலைத்தூர கல்வி இயக்கத்தின் பொறுப்பு இயக்குநர் மயிலாரப்பா டெக்கான் ஹெரால்டுக்கு அளித்த பேட்டியில், “சசிகலா கன்னட மொழி முறைபடி கற்பதில் விருப்பமாக உள்ளதாக சிறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். யார் வேண்டுமானாலும் படிக்க உரிமை உள்ளது. நான் இந்த வார இறுதியில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்ல உள்ளேன். அப்போது படிப்பு தொடர்பான விளக்கங்களை அவருக்கு தெரிவிப்பேன். சசிகலா மட்டுமில்லாமல் 200 சிறை கைதிகளும் தொலைதூர கல்வி மூலம் பல்வேறு படிப்புகளில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். சிறை கைதிகளுக்காக ஜெயிலுக்குள்ளேயே சிறப்பு பயிற்சி மையம், தேர்வு மையம் அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.”என்றார்.

இதுமட்டுமில்லாமல் சசிகலா விரைவில் கன்னடத்தில் முதுகலை படிப்பில் சேர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. கன்னடத்தில் உள்ள எழுத்துகளை தற்போது அவர் நன்றாகவே தெரிந்து கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com