சிறையில் சசிகலாவிற்கு வழங்கப்படும் பொருட்கள் இதுதானாம்..!
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிற்கு சில்வர் தட்டு, டம்ளர் என 10 பொருட்கள் சிறையில் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்திருக்கிறார் என முன்னாள் டிஐஜி ரூபா கடந்த ஜூலை மாதம் புகார் தெரிவித்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சசிகலாவிற்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், சில்வர் தட்டு, டம்ளர், சிறிய பாத்திரம், பானை, போர்வை, கம்பளி, சேலை என 10 பொருட்கள் சசிகலாவிற்கு சிறையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் விற்கப்படும் பொருட்கள் எதையும் சசிகலா வாங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சிறையில் சொகுசு வாழ்க்கைக்காக அதிகாரிகளுக்கு, சசிகலா
லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், சிறைத்துறை இவ்வாறு கூறியுள்ளது.