பிப்.,8 ஆம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா - டிடிவி தினகரன்

பிப்.,8 ஆம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா - டிடிவி தினகரன்

பிப்.,8 ஆம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா - டிடிவி தினகரன்
Published on

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுவிக்கப்பட்ட நிலையில், வரும் 8 ஆம் தேதி அவர் தமிழகம் வர இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர்பரப்பன அக்ரஹாரா  சிறையில் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததால்  விடுதலை செய்யப்பட்ட அவரால் உடனே தமிழகம் வர இயலவில்லை.

இதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதியானதும், அவர் பெங்களூரில் உள்ள அவர் தனியார் ஹோட்டலில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்து, அது தொடர்பான அறிக்கையை தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

முன்னதாக சசிகலா 7 ஆம் தேதி தமிழகம் வருவதாக கூறப்பட்ட நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாதன் ஹெலிகாப்டர் மூலம் பூ தூவி சசிகலாவை வரவேற்க அனுமதி கேட்டு சமர்பித்த கடிதம் கவனம் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com