\
ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த 3 சபதங்கள்

ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த 3 சபதங்கள்

ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த 3 சபதங்கள்
Published on

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்லும் முன் ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற சசிகலா, 3 முறை கையால் அடித்து சபதம் செய்தார். 

சென்னையில் இருந்து கார் மூலமாக பிற்பகலில் புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சமாதியில் 3 முறை கையால் ஓங்கி அடித்து சபதம் செய்தார். அவர் சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என்று சபதம் செய்ததாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதன்பின், ராமாபுரம் சென்று எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக பெங்களூரூ சென்ற சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர், பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com