\
அதிமுக தொடர்ந்த வழக்கில் சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கியது நீதிமன்றம்!

அதிமுக தொடர்ந்த வழக்கில் சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கியது நீதிமன்றம்!

அதிமுக தொடர்ந்த வழக்கில் சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கியது நீதிமன்றம்!
Published on: 

அதிமுக தொடர்ந்த நிராகரிப்பு மனு பற்றி சசிகலா பதிலளிக்க அவகாசம் அளித்தது சென்னை உயர் நீதிமன்றம். சசிகலாவின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்க உரிமையியல் நீதிமன்றம் அவகாசம் தந்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க கோரி சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக ஏற்கெனவே டிடிவி.தினகரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் சசிகலா மனுவை நிராகரிக்க கோரி அதிமுக சார்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சசிகலாவின் கோரிக்கையை ஏற்று வருகிற ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com