”பொதுச்செயலாளர் உரிமை கோர சசிகலாவுக்கு உரிமை இல்லை" - ஓபிஎஸ், இபிஎஸ் வாதம்

”பொதுச்செயலாளர் உரிமை கோர சசிகலாவுக்கு உரிமை இல்லை" - ஓபிஎஸ், இபிஎஸ் வாதம்
”பொதுச்செயலாளர் உரிமை கோர சசிகலாவுக்கு உரிமை இல்லை" - ஓபிஎஸ், இபிஎஸ் வாதம்

அதிமுக பொதுச் செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு அவர் சிறை சென்ற பிறகு, சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவில், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் என அறிவிக்க கோரப்பட்டிருந்தது.

இதனிடையே சசிகலாவின் மனுவை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக பொதுச் செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், கட்சியும், சின்னமும் தங்களிடம் இருப்பதை தேர்தல் ஆணையமும் உறுதி செய்துள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com