தமிழ்நாடு
என்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் - சசிகலா வேண்டுகோள்
என்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் - சசிகலா வேண்டுகோள்
தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு ஆதரவாளர்களை வி.கே.சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ரூபம் வேலவன் என்பவருடன், சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னை சந்திக்க யாரும் வரவேண்டாம் எனக் கூறியுள்ள சசிகலா தாங்கள் இருக்கும் பகுதியிலேயே மக்கள் நலத் திட்ட உதவிகளை செய்யுமாறு கூறியுள்ளார்.
சசிகலாவின் பிறந்த நாள் நாளை (ஆகஸ்ட் 18) வருவது குறிப்பிடத்தக்கது.