சசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உண்டு: நாஞ்சில் சம்பத்

சசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உண்டு: நாஞ்சில் சம்பத்

சசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உண்டு: நாஞ்சில் சம்பத்
Published on

அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உள்ளது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட காரை, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாஞ்சில் சம்பத் அண்மையில் ஒப்படைத்திருந்தார். இதனால் அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. மேலும் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை போயஸ் தோட்டத்தில் சந்தித்த நாஞ்சில் சம்பத், தான் அக்கட்சியில் தொடர்வதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், அதிமுக பொதுச் செயலாளரான சசிகலாவிற்கு அனைத்து திறமைகளும் உள்ளது என கூறியுள்ளார். அன்பிற்குக் கட்டுப்பட்டு பொதுவாழ்வில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

கட்சியில், சுதந்திரமாக செயல்படுமாறு சசிகலா அறிவுறுத்தியதாக கூறியுள்ள நாஞ்சில் சம்பத் சசிகலா தலைமையில் சுதந்திரம் கிடைப்பதை உணர்வதாகவும் கூறியுள்ளார். கட்சியில் புதிதாக பொறுப்பு எதுவும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ள நாஞ்சில் சம்பத், உள்ளாட்சித் தேர்தலுக்காக உழைப்பேன் எனவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com