\
விசாரணையை சந்திக்க வேண்டும் சசிகலா... உயர்நீதிமன்ற மதுரை கிளை

விசாரணையை சந்திக்க வேண்டும் சசிகலா... உயர்நீதிமன்ற மதுரை கிளை

விசாரணையை சந்திக்க வேண்டும் சசிகலா... உயர்நீதிமன்ற மதுரை கிளை
Published on: 

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை விடுதலை செய்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. அந்நிய செலாவணி மோசடி தொடர்பான வழக்கில் 1996ல் சசிகலா கைது செய்யப்பட்டு

சிறை சென்று பின்னர் ஜாமீனில் வெளி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றம் மூன்று வழக்குகளில் இருந்தும் சசிகலாவை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.

இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் சசிகலாவை விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.மேலும் அந்நிய செலவாணி மோசடி வழக்கு விசாரணையை சசிகலா சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com