தமிழ்நாடு
போயஸ் கார்டனில் சசிகலாவுடன் முதலமைச்சர், அமைச்சர்கள் ஆலோசனை
போயஸ் கார்டனில் சசிகலாவுடன் முதலமைச்சர், அமைச்சர்கள் ஆலோசனை
சென்னை போயஸ் தோட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.