சிறையில் தனக்கென தனி அறை ஒதுக்க வேண்டும்...அதில் கட்டில், தொலைக்காட்சி வேண்டும் என பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் சசிகலா சில வசதிகளை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனக்கென தனி அறை ஒதுக்க வேண்டும், அதில் கட்டில், தொலைக்காட்சி தேவை என அவர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர குடிக்க மினரல் வாட்டர், 24 மணி நேரமும் வெந்நீர், மேற்கத்திய பாணி கழிவறை உள்ளிட்ட வசதிகளையும் அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.