\
சசிகலாவின் ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை

சசிகலாவின் ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை

சசிகலாவின் ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை
Published on

சசிகலா, இளவரசி, சுதாகரனின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலாவுக்கு சொந்தமான 187-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் தொடர்ச்சியாக சொத்துக்களை முடக்கும் பணிகளை வருமானவரித்துறையினர் செய்து வருகின்றனர்.

அதன் ஒருகட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் சசிகலாவின் ரூ.300 கோடியிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியது. போயஸ்கார்டனில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது சிறுதாவூர் பங்களா, கோடநாடு எஸ்டேட் ஆகிய சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com