முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா பிரதமருக்கு தனித் தனியே கடிதம்

முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா பிரதமருக்கு தனித் தனியே கடிதம்

முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா பிரதமருக்கு தனித் தனியே கடிதம்
Published on

இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளனர்.

பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 120 படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், 2 ஆண்டுகளாக இலங்கையில் இருக்கும் 119 படகுகள் சேதமடைந்து வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடித்தில், கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் உட்பட இலங்கை சிறையில் உள்ள 35 மீனவர்கள், 120 படகுகளையும் மீட்க நடவடிக்கை தேவை என கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளுக்கு முரணாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சசிகலா தனது கடித்தில் கூறியுள்ளார்.

இதற்கிடையே இலங்கை கடற்படையால் கைதான 10 மீனவர்களை பிப்ரவரி 21 வரை சிறையில் அடைக்க யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com