சசிகுமார் கொலை வழக்கு.. 2-ஆம் கட்ட விசாரணை தொடக்கம்

சசிகுமார் கொலை வழக்கு.. 2-ஆம் கட்ட விசாரணை தொடக்கம்
சசிகுமார் கொலை வழக்கு.. 2-ஆம் கட்ட விசாரணை தொடக்கம்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை 2-ஆம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. அதற்காக கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கோவை வந்துள்ளனர்.

5 குழுக்களாக பிரிந்த அதிகாரிகள் உக்கடம், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். சாய்பாபா காலணியில் உள்ள முன்னா என்பவரது வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை கடந்த மே மாதம் முடிவுற்ற நிலையில், 2-ஆம் கட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் (37) கடந்த 2016 செப்.22-ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை ஒட்டி ஏற்பட்ட கலவரம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தமிழக சிபிசிஐடி போலீஸாரால் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பின்னர் இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com