சசிகலாவை சந்தித்த சரத்குமார், ராதிகா

சசிகலாவை சந்தித்த சரத்குமார், ராதிகா

சசிகலாவை சந்தித்த சரத்குமார், ராதிகா
Published on

சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா ஆகியோர் சந்தித்து பேசினர்.

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய சசிகலா, “நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன். ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் மற்றும் ராதிகா சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்ததாக தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com