\
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்ம  ப்ரியா விலகல்

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்ம ப்ரியா விலகல்

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்ம ப்ரியா விலகல்
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து சந்தோஷ்பாபு ஐஏஎஸ், பத்ம ப்ரியா ஆகியோர் விலகியுள்ளனர்.

தகவல் தொடர்பு செயலாளராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு அப்பணியிலிருந்து ஓய்வுபெற்று மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்தவர். அவர் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, ம.நீ.ம.வில் சுற்றுச்சூழல் பிரிவு செயலாளராக இருந்து வந்த பத்மப்ரியா அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். ம.நீ.ம.வில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் வெளியேறிய நிலையில் தற்போது சந்தோஷ்பாபு, பத்மப்ரியா ஆகியோர் விலகியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com