\
விரைவில் வீடு திரும்பும் நம்பிக்கையுடன் சாந்தன்: சகோதரர் சுதாகரன் பேட்டி

விரைவில் வீடு திரும்பும் நம்பிக்கையுடன் சாந்தன்: சகோதரர் சுதாகரன் பேட்டி

விரைவில் வீடு திரும்பும் நம்பிக்கையுடன் சாந்தன்: சகோதரர் சுதாகரன் பேட்டி
Published on

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன் விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கையில் இருந்து வந்த அவரது சகோதரர் சுதாகரன் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களது அப்பா, அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி சாந்தனிடம் கூறினேன். அம்மாவுக்கு கண் பார்வை குறைவாக இருப்பதையும் அவரிடம் தெரிவித்தேன். அதுமட்டும் அல்லாமல் உறவு ரீதியாக பேசினோம். எங்களது உறவினர்களை பற்றி கேட்டார். சட்ட அறிவு தமக்கு இல்லாத காரணத்தால் பரோல் குறித்தும், விடுதலை பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் தான் விரைவில் விடுதலை பெற்று வீடு திரும்புவேன் என சாந்தன் என்னிடம் நம்பிக்கையுடன் கூறினார்” என்றார்.

சாந்தனை சந்திக்க இலங்கையில் இருந்து வந்திருந்ததினால் சிறையில் சந்திப்பதற்கான நேரம் கூடுதலாக்கப்பட்டு 11:30 இருந்து 3:30 வரை சுதாகரன் சாந்தனை சந்தித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com