தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்x

தூய்மைப் பணியாளர்களின் கைதைத் தொடர்ந்து., தலைமைச் செயலகம் அருகேயும் போராட்டம்.!

தனியார்மயத்தை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் துய்மைப்பணியாளர்கள் இன்று, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Published on

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து, ரிப்பன் மாளிகையின் முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம்-1 ஆம் தேதி முதல் ”தங்களின் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது; திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாக போராட்டம் நடத்தினர். தொடர்ச்சியான 13-வது போராட்ட நாளன்று தமிழக காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். ஆனாலும், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்Pt web

இந்நிலையில்தான் தூய்மைப் பணியாளர்கள் 130 நாட்களைக் கடந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களில், பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகருக்குள் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதியளிக்காத நிலையில் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் அரங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. இதனையடுத்து, நான்கு பெண் தூய்மை பணியாளர்கள் 15 நாட்களுக்கு மேலாக அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும், முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
’பணி நிரந்தரம் வேண்டும்..’ கலைஞர் நினைவிடம் அருகே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

இந்நிலையில்தான், இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் அருகே உள்ள காமாரஜர் சாலையில் அமர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காமராஜர் சாலை என்பது தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

காமராஜர் சாலையில் அமர்ந்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 30 நிமிடத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

துணை மேயர் மகேஷ் குமார்
துணை மேயர் மகேஷ் குமார்Pt web

தூய்மைப் பணியாளர்களின் இந்தப் போராட்டம் குறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் கூறும்போது, ”தூய்மைப் பணியாளர்களை பணியில் வந்து சேருங்கள் என்று பலமுறை கால அவகாசம் கொடுத்திருக்கிறோம். அதேபோல, தூய்மைப்பணியாளர்களுக்கு நலத் திட்டங்களையும் கொடுத்திருக்கிறோம். தூய்மைப்பணியாளர்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவர்கள் போராடும் வழிமுறைகள் சரியல்ல. சம்பத்தப்பட்ட துறை அமைச்சரிடம் மனு அளிக்கலாம் அல்லது மாநகராட்சியில் அவர்கள் மனு அளிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகம் முன்பும் போராட்ட நடத்திய தூய்மைப் பணியாளர்கள்

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக 50 மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தலைமை செயலகம் முன்பு படுத்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com