சனிப் பெயர்ச்சி: திருக்கொள்ளிக்காடு கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சனிப் பெயர்ச்சி: திருக்கொள்ளிக்காடு கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சனிப் பெயர்ச்சி: திருக்கொள்ளிக்காடு கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
Published on

சனிப் பெயர்ச்சியையொட்டி திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் கோவிலில், ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வருகிற 19ம் தேதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகிறது. இதனையொட்டி திருக்கொள்ளிக்காடு சனீஸ்வரர் கோவிலுக்கு தற்போதே பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வரும் 19ம் தேதி பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் இந்து சமய அறநிலைய துறை சார்பிலும் செய்யபட்டுள்ளது.  கண்காணிப்பு கேமரா ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வசதிக்காக குடிநீர், தங்குமிடம் மற்றும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கூறும்போது, ‘சனி பெயர்ச்சியை யொட்டி ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தபட்டுள்ளது. இப்போது ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யபட்டுள்ளன’ என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com