\
காவிரி ஆறு குறுக்கே புதிய அணை கட்ட ஆய்வு:  தமிழக நீர்வளத்துறை செயலாளர் தகவல் 

காவிரி ஆறு குறுக்கே புதிய அணை கட்ட ஆய்வு:  தமிழக நீர்வளத்துறை செயலாளர் தகவல் 

காவிரி ஆறு குறுக்கே புதிய அணை கட்ட ஆய்வு:  தமிழக நீர்வளத்துறை செயலாளர் தகவல் 
Published on
காவிரி ஆற்றின் குறுக்கே ஓகேனக்கல் அடுத்த ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சந்தீப் சக்சேனா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். காவிரி ஆற்றில் ஒகேனக்கலை அடுத்த ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்டப்படுமா என்ற புதிய தலைமுறை செய்தியாளரின் கேள்விக்கு ஆய்வு செய்யப்படும் என அவர் பதிலளித்தார்.
ராசி மணல் பகுதியில் புதிய அணை கட்டப்பட்டால் சுமார் 50 முதல் 100 டிஎம்சி வரை தண்ணீர் தேக்கிவைக்க முடியும் என நீர்வள நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com