ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன்கள் திறப்பு : தமிழக அரசு

ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன்கள் திறப்பு : தமிழக அரசு
ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன்கள் திறப்பு : தமிழக அரசு

தமிழகத்தில் நாளை முதல் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் 4வது கட்டமாக நேற்று நீட்டிப்பு செய்யப்பட்டது. அத்துடன் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. சலூன்களை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன்களை திறக்கலாம் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தவிர அனைத்து ஊரக பகுதிகளிலும் முடி திருத்தும் நிலையங்கள் நாளை முதல் திறக்கலாம் என தெரிவித்துள்ளார்.

அதேசமயம் திருத்தும் நிலையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடிதிருத்துமாறும், முகக் கவசங்களை அணிவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்முடிதிருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com