திருமண உதவித்தொகை விண்ணப்பம் - லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது

திருமண உதவித்தொகை விண்ணப்பம் - லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது
திருமண உதவித்தொகை விண்ணப்பம் - லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது

சேலத்தில் திருமண உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவரிடம் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகளுக்கு கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. அதற்கு நான்கு நட்களுக்கு முன்பு வெங்கடேசன் மகளுக்கு திருமண உதவித் தொகை கேட்டு தலைவாசல் சமூக நலத்துறை அலுவலகத்தில்   விண்ணப்பித்துள்ளார். அதன் பிறகு வெங்கடேசனுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால், அவரது உறவினர் கார்த்திக் (28) என்பவரை திருமண உதவித்தொகை சம்பந்தாமாக அனுப்பிவைத்துள்ளார். 

கார்த்திக் தலைவாசல் சமூக நலத்துறை அலுவலரை சந்தித்துள்ளார். அப்போது, சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் கீதா, ரூ.3,000 லஞ்சமாக கேட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட கார்த்திக் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழிகாட்டுதல்படி,  சமூக நலத்துறை அலுவலரிடம் கார்த்திக் ரூ.3,000 தொகையை கொடுத்துள்ளார். 

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஏ.எஸ்.பி. சந்திரமௌலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், சமூக நல அலுவர் கீதாவை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தியதில், அவர் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com