Old Couplept desk
தமிழ்நாடு
சேலம்: உடல்நலக் குறைவால் உயிரிழந்த மனைவி – துக்கத்தில் கணவனின் உயிரும் பிரிந்த சோகம்
ஆத்தூரில் மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டை பகுதியில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம் - ராஜம்மாள் தம்பதியினர். மூத்த தம்பதியர்களான இவர்களுக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக ராஜம்மாள் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த துக்கம் தாங்கமல் சில மணி நேரத்திலேயே மாணிக்கமும் உயிரிழந்தார்.
DeathFile Photo
இதையடுத்து இருவரின் உடல்களும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கணவன் மனைவி இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை குடும்பத்தாருக்கும் உறவினரையும் ஏற்படுத்தி உள்ளது. இரு உடல்களையும் ஊர்வலமாக கொண்டு சென்று மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.