சேலம்: பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேருக்கு சம்மன் - தீவிரமடையும் போலீசார் விசாரணை

பெரியார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் உள்ளிட்டோரால் துவங்கப்பட்ட பூட்டர் நிறுவனத்திற்கு பல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற உதவியாக இருந்த 5 பேர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன். 5 பேரிடம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
periyar university case
periyar university casept desk

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் தமிழக அரசிடம் உரிய அனுமதி பெறாமல், பூட்டர் கல்வி நிறுவனம் துவங்கிய வழக்கில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், பொறுப்பு பதிவாளராக வேதியியல் துறை பேராசிரியர் விஷ்வநாத மூர்த்தியை துணை வேந்தர் ஜெகநாதன் நியமித்து உத்தரவிட்டார்.

Police investigation
Police investigationpt desk

இந்நிலையில், பொறுப்பு பதிவாளர் விஸ்வநாத மூர்த்தி, பூட்டர் நிறுவனத்திற்காக பல ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளதாகவும், அதற்கு துணையாக பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, உதவியாளர் விஷ்னு மூர்த்தி, பூட்டர் நிறுவன ஊழியர் வனிதா ஆகியோர் மீது பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன், மாநகர காவல் ஆனையரிடம் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து பூட்டர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் பெற உதவியாக இருந்த பொருளாதர துறை பேராசிரியர் ஜெயராமன், மேலான்மை கல்வி நிறுவன பேராசிரியர் சுப்பிரமணி பாரதி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் நரேஷ் குமார், உளவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயகுமார், விருந்தினர் மாளிகை தினக்கூலி பணியாளர் நந்தீஸ்வரன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு கருப்பூர் போலீசார் சம்மன அனுப்பி இருந்தனர்.

periyar university case
periyar university casept desk

இதைத் தொடர்ந்து கருப்பூர் காவல் நிலையத்தில் பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி ஆகியோர் முன்னதாக ஆஜராகினர். இதனை தொடர்ந்து விலங்கியல் துறை உதவி பேராசிரியர் நரேஷ்குமார், உளவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயகுமார், விருந்தினர் மாளிகை தினக்கூலி பணியாளர் நந்தீஸ்வரன் ஆகியோரும் தனியாக ஆஜராகியுள்ளனர். ஐந்து பேர் ஆஜராகியுள்ள நிலையில், அவர்களிடம் சூரமங்கலம் உதவி ஆணையர் நிலவழகன், காவல் ஆய்வாளர் மனோன்மணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிலருக்கும் சம்மன் அனுப்ப இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com