பேரம் பேசி விற்கப்படும் உடல் உறுப்புகள்? பதறவைக்கும் சர்ச்சை!

பேரம் பேசி விற்கப்படும் உடல் உறுப்புகள்? பதறவைக்கும் சர்ச்சை!

பேரம் பேசி விற்கப்படும் உடல் உறுப்புகள்? பதறவைக்கும் சர்ச்சை!
Published on

சேலம் தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை பேரம் பேசி விற்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில், விபத்தில் மூளைச்சாவு அடைந்த சீரங்கன் என்பவரின் குடும்பத்தினரிடம், தானம் என்ற பெயரில் பேரம் பேசி உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, சென்னையிலிருந்து வந்த சுகாதார பணிக்குழுவினர், சர்ச்சைக்குரிய அந்தத் தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். 

முன்னதாக, உடலுறுப்பு தானம் வழங்கியதாக கூறப்படும் சீரங்கன் குடும்பத்தினரிடம் ஓமலூர் சென்று விசாரணை மேற்கொண்ட இக்குழுவினர், இடைத்தரகர்களாக செயல்பட்டதாகக் கூறப்படும் நபர்களிடமும் விசாரணை நடத்தினர். உடலுறுப்பு விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து உரிய விசாரணை நடத்திய பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என்று சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com