கர்ப்பிணியின் கண்ணீருக்கு கருணை காட்டாத காவல்துறை : கணவரின் பைக்கை பறித்த கொடுமை..!

கர்ப்பிணியின் கண்ணீருக்கு கருணை காட்டாத காவல்துறை : கணவரின் பைக்கை பறித்த கொடுமை..!
கர்ப்பிணியின் கண்ணீருக்கு கருணை காட்டாத காவல்துறை : கணவரின் பைக்கை பறித்த கொடுமை..!

மேட்டூர் அருகே கர்ப்பிணி மனைவிக்கு மாத்திரை வாங்க சென்ற கணவரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கருங்கல்லூர் பெத்தான் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி பெரியசாமி (32). இவரது மனைவி சண்முகப்பிரியா (29). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கர்ப்பிணியாக உள்ள சண்முகப்பிரியாவுக்கு நேற்று முன்தினம் உடல் உபாதை ஏற்பட்டதால், மாத்திரை வாங்க அவரது கணவர் கொளத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த போலீஸார், ஊரடங்கில் வெளியே வந்ததற்காக வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையறிந்த சண்முகப்பிரியா கருங்கல்லூரில் இருந்து கொளத்தூர் காவல்நிலையத்திற்கு நடந்தே சென்றுள்ளார். தான் ஒரு கர்ப்பிணி என்றும், தனக்காக தான் தனது கணவர் மாத்திரைகள் வாங்க வந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் போலீசார் இருவரும் காவல்நிலையத்தை விட்டு வெளியேறாவிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என அச்சுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து இன்று பிற்பகல் 12 மணிக்கு காவல்நிலையம் நிலையத்திற்கு சென்ற அத்தம்பதியினர், இரவு 9 மணி வரை காவல்நிலையத்திலேயே இருந்து மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளனர். ஆனால் போலீஸார் வாகனத்தை தரவில்லை எனப்படுகிறது.

ஊரடங்கு அமலில் இருப்பதால், பேருந்து போக்குவரத்து இல்லாத இந்த தருணத்தில் நிறைமாத கர்ப்பிணியான தனக்கு பரிசோதனை செய்வதற்கு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என சண்முகப்பிரியா போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் போலீஸார் பிரசவ காலம் என்றால் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலமாக செல்லுமாறு கூறியுள்ளனர். அத்துடன் காவல்நிலையத்திலிருந்து வெளியேறுமாறும் விரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து கணவன் - கர்ப்பிணி மனைவி இருவரும் கொளத்தூரில் இருந்து கருங்கல்லூருக்கு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று, இரவு 11 மணி அளவில் வீடு சேர்ந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com