சேலம்: அண்ணாமலையை கட்டித்தழுவி வரவேற்ற பாமக எம்எல்ஏ... பேசுபொருளான சந்திப்பு!

மேட்டூரில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பாமக எம்எல்ஏ சதாசிவம், கட்டித் தழுவி வரவேற்ற நிகழ்வு அரசியில் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Annamalai
Annamalaipt desk

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை மேற்கொண்டார். அப்போது, மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று அண்ணாமலையை சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இன்னும் ஒரு சில மாதங்களில் நாடளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், பாமக, திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

Annamalai
Annamalaipt desk

இந்நிலையில், அண்ணாமலை, திமுக அரசு மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும், கடும் விமர்சனத்தை முன் வைத்து பாதயாத்திரை நடத்தி வருகிறார். மேச்சேரியில் 142 வது சட்டமன்ற தொகுதிக்கு வந்த அண்ணாமலையை பாமக எம்எல்ஏ சதாசிவம் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து வரவேற்பு அளித்தார், அப்போது வரவேற்பு அளித்த சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தை கட்டித்தழுவி அண்ணாமலை மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Annamalai
“சாதி அரசியலால் தருமபுரி மாவட்டம் பின்தங்கியுள்ளது” – அண்ணாமலை குற்றச்சாட்டு

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்திடம் கேட்டபோது, “நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரிக்கு வருகை புரிந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மரியாதை நிமித்தமாக வரவேற்பு அளித்தேன், அவ்வளவே” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com