பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
Published on

சேலம் மாவட்டம் ஓமலூரில் பெரியார் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த நிவேதிதா என்ற மாணவி முதுநிலை இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு அவரது துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்படுகிறது. மாணவி இறந்து ஐந்து மணி நேரத்திற்கு மேலாகியும் பல்கலைக்கழக துணை வேந்தர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

எனவே மாணவி தற்கொலை விவகாரத்தை மறைக்க பல்கலைக்கழகம் முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி விடுதி முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி இறப்பு குறித்து முழுமையான தகவலை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com