
பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும், புகார்களைத் தெரிவிக்கவும் 'மை சேலம்' என்ற மென்பொருள் சேவையை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்தார். இந்த மென்பொருளை மாற்றுத்திறனாளி ஒருவர் வெளியிட மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயி ஒருவர் பெற்றுகொண்டார்.
இந்த இலவச செயலியை google playstore-ல் my salem என்று தட்டச்சு செய்து பதிவிறக்கம் செய்து, பொதுமக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள், சுற்றுலாத்தலங்கள், மற்றும் அரசு இணையதளங்கள் குறித்த விவரங்கள் அதில், தொகுக்கப்பட்டுள்ளன.
பின்னர் பேசிய ஆட்சியர், அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த விவரங்கள் அனைத்தையும் முழுமையாக தெரிந்துகொள்ளவும், பொதுமக்கள் தங்கள் புகார்களையும் இந்த செயலி மூலம் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் ரோஹிணி தெரிவித்தார்.