\
திடீரென வந்த காதலியின் தாய்! மாடியிலிருந்து கீழே குதித்த மாணவருக்கு நேர்ந்த சோகம்!

திடீரென வந்த காதலியின் தாய்! மாடியிலிருந்து கீழே குதித்த மாணவருக்கு நேர்ந்த சோகம்!

திடீரென வந்த காதலியின் தாய்! மாடியிலிருந்து கீழே குதித்த மாணவருக்கு நேர்ந்த சோகம்!
Published on

சேலத்தில் தனியார் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த மாணவன் 50 அடி உயர குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தரும்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற மாணவர், சேலத்தில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி, கொல்லப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மாணவன் சஞ்சய் அதே பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் செம்புவிடத்தற்கு நேரில் சென்று மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா நேரில் விசாரணை மேற்கொண்டார். சக மாணவி ஒருவரை அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் சந்தித்தபோது மாணவியின் தாயார் வந்துவிட்டதால் அச்சத்தில் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக 50 அடி உயரத்திலிருந்து கீழே குதித்த சஞ்சய் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com