தொழிலாளி கைது pt desk
தமிழ்நாடு
சேலம்: அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக கூலித் தொழிலாளி கைது
ஆத்தூர் அருகே அரசு பேருந்து மீது கல்வீசி தாக்கியதாக கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து ஆத்தூருக்கு நேற்று முன்தினம் 50 பயணிகளுடன் அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது கொத்தாம்பாடி தனியார் திருமண மண்டபம் அருகே மர்ம நபர் ஒருவர் பேருந்து மீது கல் வீசி தாக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் பெரியசாமி ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Arrestedfile
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கல்பகனூரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன், கூலித் தொழிலாளியான மோகன், (27) பேருந்து மீது கல் வீசி தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து ஆத்தூர் ஊரக போலீசார் மோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.