சேலம்: குடும்பத் தகராறில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு - காப்பாற்ற சென்ற கணவனும் உயிரிழந்த சோகம்

வாழப்பாடி அருகே குடும்பத் தகராறு காரணமாக புதுமணப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை காப்பாற்ற சென்ற கணவனும் உயிரிழந்த சோகம் இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Couple
Couplept desk

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள துக்கியம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரது மகன் அருள் முருகன். இவருக்கும் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமணத் தம்பதிகளான இருவரும் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர்.

Rescue
Rescuept desk

இந்நிலையில் நேற்றிரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அபிராமி வீட்டில் இருந்து திடீரென வெளியே ஓடியுள்ளார். தொடர்ந்து கணவன் அருள் முருகனும் பின் தொடர்ந்து ஓடிய நிலையில், அபிராமி வீட்டின் அருகில் உள்ள 100 அடி ஆழ விவசாய கிணற்றில் குதித்துள்ளார். அவரை காப்பாற்ற அருள் முருகனும் குதித்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி இருவரையும் சடலமாக மீட்டனர் 2 உடல்களையும் கைப்பற்றிய வாழப்பாடி போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com