தலைமை காவலர் சஸ்பெண்ட்
தலைமை காவலர் சஸ்பெண்ட் pt desk

சேலம் | பணியின் போது மதுபோதையில் இருந்ததாக தலைமை காவலர் சஸ்பெண்ட்

கெங்கவல்லி காவல் நிலையத்தில் பணியின் போது மதுபோதையில் இருந்ததாக தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Published on

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர், கெங்கவல்லி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சந்திரசேகரன் பணி நேரத்தில் மது போதையில் இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயலுக்கு புகார் சென்றது.

suspend
suspendfile
தலைமை காவலர் சஸ்பெண்ட்
சென்னை | ’இதோ உங்க பணி ஆணை’ அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.62.80 லட்சம் மோசடி - இருவர் கைது

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் நேரில் விசாரணை நடத்தி அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில் பணியின் போது மதுபோதையில் இருந்ததாக சந்திரசேகரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com