அரசுப்பள்ளி ஆசிரியர்
அரசுப்பள்ளி ஆசிரியர்முகநூல்

சேலம்: மாணவர்களை கால் அழுத்த சொன்ன அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!

ஆசிரியர் ஜெய பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.
Published on

சேலம் அருகே மாணவர்களை கால் அழுத்த செய்த அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கணித ஆசிரியர் ஜெய பிரகாஷ் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்
தொடர் அதிருப்தி.. கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள்! நாதகவில் நடப்பது என்ன?

இந்நிலையில், ஆசிரியர் ஜெய பிரகாஷூக்கு மாணவர்கள் கால் அழுத்திவிடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆசிரியர் ஜெய பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com