பாயும் காளைகள் பந்தாடும் காளையர் - இது நிலவாரப்பட்டி ஜல்லிக்கட்டு

பாயும் காளைகள் பந்தாடும் காளையர் - இது நிலவாரப்பட்டி ஜல்லிக்கட்டு
பாயும் காளைகள் பந்தாடும் காளையர் - இது நிலவாரப்பட்டி ஜல்லிக்கட்டு

சேலம் நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 400 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர்.

சேலம் நிலவாரப்பட்டி மூலக்காடு பகுதியில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஜல்லிக்கட்டு விழாவை துவக்கி வைத்தார். இதில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 400 காளைகளும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை பிடிக்க வீரர்கள் ஆர்வத்துடன் களத்தில் உள்ளனர்;. மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் காளைகள் போக்கு காட்டி பாய்ந்து செல்வதை பார்வையாளர்கள் உற்சாகத்தோடு கண்டுகளித்து வருகின்றனர். காளைகளை அடக்கும் வீரர்கள் மற்றும் பிடிபடாமல் தப்பிச் செல்லும் காளைகளுக்கு பட்டு சேலைகள், செல்போன், மிக்ஸி, குக்கர், உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட நிலவாரப்பட்டியில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதால் சுற்றியுள்ள கிராம மக்கள் ஜல்லிக்கட்டு விழாவை கண்டுகழிக்க அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் நிலவாரப்பட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழா பாதுகாப்பிற்காக 350 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com