காய்ச்சல் குறித்து சந்தேகங்களைக் கேட்டறிய இலவச எண்
காய்ச்சல் குறித்து சந்தேகங்களைக் கேட்டறிய இலவச எண் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.
காய்ச்சல் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கவும், சிகிச்சைக்காக ஆலோசனை வழங்கவும் சேலம் அரசு மருத்துவமனையில் இலவச சேவை எண்ணை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கான ஆலோசனை மற்றும் சந்தேகங்கள் குறித்து பொதுமக்களுக்கு பதிலளிக்க இலவச சேவை எண் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுமக்கள் காய்ச்சல் குறித்த தங்களின் சந்தேகங்களைக் கேட்டறிய 1800 425 2424 என்ற எண்ணை 24 மணி நேரமும், எல்லா நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரோஹினி தெரிவித்தார்.