சுகாதாரத்தை பேணாத நூற்பாலைகள், வீடுகளுக்கு ரூ.14.25 லட்சம் அபராதம்

சுகாதாரத்தை பேணாத நூற்பாலைகள், வீடுகளுக்கு ரூ.14.25 லட்சம் அபராதம்

சுகாதாரத்தை பேணாத நூற்பாலைகள், வீடுகளுக்கு ரூ.14.25 லட்சம் அபராதம்
Published on

சேலம் மாவட்டத்தில் சுகாதாரத்தை பேணாத நூற்பாலைகள், வீடுகளுக்கு ரூ.14.25 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் சண்முகா மருத்துவமனையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கி அதில் ஏராளாமான கொசுப்புழுக்கள் இருப்பதை கண்டு அதிகாரிகள் முதலில் இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மருத்துவமனைக்கு உள்ளே சென்று ஆய்வு நடத்த விடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ், மருத்துவமனையில் தொடர்ந்து ஆய்வு நடத்தினார். அப்போது தொட்டி ஒன்றில் ஒரு பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அபாயகரமான மருத்துவக் கழிவுகளும் அகற்றப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தவறிய காரணத்திற்காக ஐந்து லட்சம் ரூபாயும், மருத்துவ கழிவுகளை அகற்றாத காரணத்திற்காக ஐந்து லட்சம் ரூபாயும் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டார்.

பிறகு நூற்பாலைகள், வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேங்க விட்டதற்காக மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கொசு உற்பத்திக்கு வழிவகுத்த வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com