சேலம்: எடப்பாடி பழனிசாமியுடன் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை

சேலம்: எடப்பாடி பழனிசாமியுடன் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை

சேலம்: எடப்பாடி பழனிசாமியுடன் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை
Published on

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை, தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.சி கருப்பண்ணன், கே.பி.அன்பழகன், முனுசாமி, சேவூர் ராமசந்திரன், திண்டுக்கல் சீனிவாசன் உள்பட தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு ஆலோசனையிலும் ஈடுபட்டனர்.

மேலும் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மதுரை, திருப்பரங்குன்றம் ராஜன் செல்லப்பா, தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com