சேலத்தில் வீடு வீடாக ஆட்சியர் ரோஹிணி அதிரடி ஆய்வு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சேலத்தில் வீடு வீடாக ஆட்சியர் ரோஹிணி அதிரடி ஆய்வு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சேலத்தில் வீடு வீடாக ஆட்சியர் ரோஹிணி அதிரடி ஆய்வு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சேலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியின்போது பணியாளர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று மாவட்ட ஆட்சியர் ரோஹிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் 15 நாட்கள் ஈடுபட வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் டெங்கு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சேலம், கொண்டலாம்பட்டி பகுதியில் வீடு வீடாக சென்று அம்மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆய்வு நடத்தினார். அப்போது வீடுகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்கியிருப்பதைக் கண்டு மக்களிடம் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமில்லாமல் டெங்குவால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதனை ஒழிக்கும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் டெங்கு கொசு ஒழிப்பு பணியின்போது பணியாளர்களை வீட்டிற்குள்
அனுமதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று மாவட்ட ஆட்சியர் ரோஹிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com