\
எடப்பாடி: ஸ்டார்ட் செய்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூ.ட்டர்!

எடப்பாடி: ஸ்டார்ட் செய்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூ.ட்டர்!

எடப்பாடி: ஸ்டார்ட் செய்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூ.ட்டர்!
Published on

எடப்பாடி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்மன் நகர் 2வது வீதியில் வசிப்பவர் வரதராஜன். இவர் தனது மின்சார ஸ்கூட்டரை வீட்டில் சார்ஜ் போட்டு விட்டு வேலைக்குச் செல்வதற்காக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது திடீரென தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர் முற்றிலும் சேதமடைந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வீட்டிலிருந்த தண்ணீரை ஊற்றி கொழுந்து விட்டு எரிந்த ஸ்கூட்டரை மேலும் தீ பரவாமல் தடுக்க முயற்சித்தனர். இதுகுறித்து எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சியடித்து தீயை முற்றிலும் அணைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com