‘ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம்!'- சேலத்தில் கவனம் ஈர்க்கும் நூதன விளம்பரம்!

சேலத்தில் ஹெல்மெட் ஒன்று வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று விற்பனையாளரின் விளம்பரம் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
buy helmet and get tomato free
buy helmet and get tomato freept desk

கடந்த பல நாட்களாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஹெல்மெட் விற்பனையாளர் முகமது காசிம் என்பவர் அறிவித்துள்ள தக்காளி ஆஃபர் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்படி என்ன ஆஃபர் தெரியுமா அது? ‘தலை கவசம் என்பது உயிர் கவசம்’ மற்றும், 'விவசாயத்தை காப்போம்' என்பதை வலியுறுத்தி 'தலைக்கு ஹெல்மெட் முக்கியம், சமையலுக்கு தக்காளி முக்கியம்' என சிறப்பு சலுகையை அறிவித்துள்ளார் அவர்.

tomato free
tomato freept desk

இதில், 349 ரூபாய்க்கு ஒரு ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது. இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விற்பனையை நடிகர் பெஞ்சமின் தொடங்கி வைத்தார். சேலத்தில் தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் பலரும் ஹெல்மெட் வாங்கி தக்காளியை இலவசமாக பெற்றுச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com