விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த சகாயம் ஐ.ஏ.எஸ்..!

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த சகாயம் ஐ.ஏ.எஸ்..!

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த சகாயம் ஐ.ஏ.எஸ்..!
Published on

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ் விண்ணப்பித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளியே கொண்டு வந்தவர் ஐ.ஏ.எஸ் சகாயம். தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக 6 வருடமாக பதவி வகித்து வருகிறார்.

அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே விஆர்.எஸ் கேட்டுள்ளார். வி.ஆர்.எஸ்.க்கு விண்ணப்பித்த சகாயம் இன்னும் 2 மாதங்களில் அரசு பதவிவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

முக்கியமில்லாத பதவியில் பல ஆண்டுகளாக வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் சகாயம் இந்த முடிவை எடுத்துள்ளார். மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயம் விருப்ப ஓய்வை கேட்டிருப்பது பேசு பொருளாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com