கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது

கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது

கவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது
Published on

இந்தாண்டுக்கான யுவ புரஸ்கார் விருது, ’வால்’ என்ற கவிதை தொகுப்புக்காக சபரிநாதனுக்கும், பால புரஸ்கார் விருது, தேவி நாச்சியப்பனுக் கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி ஒவ்வொரு வருடமும் 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருதையும் சிறுவர் இலக்கியத்துக்காக, ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதையும் வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 23 எழுத் தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதும் 22 எழுத்தாளர்களுக்கு பால புரஸ்கார் விருதுகளும் அறிவிக்கப்பட்டன. 

இதில் தமிழில் ’வால்’ என்ற கவிதை தொகுப்புக்காக சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இலக்கிய பங்களிப்புக்காக பால புரஸ்கார் விருது, தேவி நாச்சியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேவி நாச்சியப்பன், குழந்தைகள் கவிஞர்கள் அழ. வள்ளியப்பாவின் மகள்.

இந்த விருது, தாமிரப் பட்டயம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com