விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் அறவழி போராட்டம் நடத்தினால் அதில் தவறேதும் இல்லை என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
மக்கள் பாதை அமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற சகாயம் ஐஏஎஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தேசத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்துவதாக உள்ளது என வருத்தம் தெரிவித்தார்.
தமிழக மக்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தேன். ஆனால் மெரினாவில் நடந்த போராட்டம் மண்ணுக்கான போராட்டம் இல்லை, தமிழ்நாடுக்கான போராட்டம் என்பதை உணர்ந்துகொண்டேன் என்று தெரிவித்தார்.