car accidentpt desk
தமிழ்நாடு
தம்பியிடம் கார் ஓட்டிப் பழகிய அக்காவுக்கு நேர்ந்த பரிதாபம் - சிதம்பரத்தில் சோகம்
சிதம்பரம் அருகே பிச்சாவரம் பகுதியில் ஓட்டுநர் பயிற்சி பெறும் போது கட்டுப்பாட்டை இழுந்த கார் ஆற்றில் விழுந்து விபத்து. நகைக்கடை உரிமையாளரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நகைக்கடை நடத்தி வரும் மங்கேஷ்குமார் என்பவரது மனைவி சுபாங்கி. இவர் தனது தம்பி ராம்தேவிடம் கார் ஓட்டிப் பழகியுள்ளார். அப்போது பிச்சாவரம் பகுதியில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தில் இருந்து தெற்கு பிச்சாவரம் வடிகால் ஆற்றில் தலைப்குப்புற விழுந்துள்ளது.
இதில் ராம்தேவ் கதவை திறந்து தப்பித்த நிலையில், காருடன் சுபாங்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கார் மற்றும் சுபாங்கியின் உடலை மீட்டனர். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.