குடியரசுதினமா? குடிப்பதற்குத்தான் தினம் இருக்கு! - ஜீயர் பேச்சு..
என்ன குடியரசு தினம்? இங்கு குடிப்பதற்குத்தான் தினம் இருக்கிறது என சடகோப ராமானுஜ ஜீயர் பேசியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் சடகோப ராமானுஜ ஜீயர்
பங்கேற்று பேசினார். அதில், வைரமுத்து ஸ்ரீவில்லிப்புதூர் வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கோரும் வரை அறவழிப்போராட்டம்
தொடரும் எனவும், சாமியார்களால் என்ன செய்து விட முடியும் என நினைப்பவர்களுக்கு, எதற்கும் தாங்கள் துணிந்தவர்கள் என்பதை
காட்டுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ‘என்ன குடியரசு தினம்? இங்கு குடிப்பதற்குத் தான் தினம் இருக்கிறது’ என்று விமர்சித்துள்ள அவர், அறவழியில் போராட
அனுமதி எதற்கு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக பேசிய அவர், இந்துக் கடவுள்களை மேடை போட்டு விமர்சித்தால்
சோடா பாட்டில் வீசவும் அஞ்சமாட்டோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.