\
சபரிமலை சீசன்.. குமுளியில் வழிநெடுகிலும் தெருவிளக்குகள் பொருத்தம்..!

சபரிமலை சீசன்.. குமுளியில் வழிநெடுகிலும் தெருவிளக்குகள் பொருத்தம்..!

சபரிமலை சீசன்.. குமுளியில் வழிநெடுகிலும் தெருவிளக்குகள் பொருத்தம்..!
Published on

சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழக, கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் வழி நெடுகிலும் தெருவிளக்கு பொருத்தப்பட்டு வருகின்றன.

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக- கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியே தினமும் ஆயிரக்கணக்கில் ஐயப்ப பக்தர்கள் சென்று வரத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க செல்லும் ஐயப்ப பக்தர்கள், கால் நடையாக வரும் பக்தர்கள், பேருந்துகளில் சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி சார்பில் குமுளியில் வழி நெடுகிலும் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. குமுளி மலைப்பாதையில் உள்ள தமிழக போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து பேருந்து நிலையம் வரை சாலையின் இருபுறமும் நூற்றுக்கும் அதிகமான தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது பக்தர்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com