பங்குனி உத்திரம் ஆராட்டு விழா | சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம், திருவிழா கோலாகலத்திற்காக இன்று (ஏப்ரல் 1ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதையடுத்து ஏப்ரல் 2ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.
இதற்கிடையில், ஏப்ரல் 10ம் தேதி முதல் திருவிழா துவங்குகிறது. ஏப்ரல் 14ம் தேதி திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழ் மாதத்தின் சித்திரை, மலையாள மாதத்தின் இடவம் மாதங்களின் மாதாந்திர பூஜை ஏப்ரல் 14ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து ஏப்ரல் 11ம் தேதி பங்குனி உத்திர சிறப்பு பூஜையும், ஐயப்பனுக்கு பம்பையில் ஆராட்டும், ஏப்ரல் 14ம் தேதி பூஜையும் நடக்கிறது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 1ம் தேதி) துவங்கி ஏப்ரல் 19ம் தேதி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இதற்காக தரிசன முன்பதிவு துவங்கியுள்ளது. பக்தர்கள், sabarimala.org.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் டோர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.