\
எஸ்.வி.சேகர், அண்ணாமலை
எஸ்.வி.சேகர், அண்ணாமலைPT

“தமிழக பாஜகவை நம்புவது வீண்; அண்ணாமலை எதற்கும் லாயக்கு இல்லாதவர்” - விமர்சித்து தள்ளிய எஸ்வி சேகர்!

தமிழக பாஜகவிற்குள் தான் பிராமணர் மீது இனப்படுகொலை நடைபெறுகிறது என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
Published on

தமிழக பாஜகவை நம்புவது வீண் என்றும் யாரும் பாஜகவை நம்ப வேண்டாம் என்றும் எஸ்வி சேகர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் இன்று சந்தித்த எஸ்.வி.சேகர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

அதில், “தமிழகத்தில் பிராமணர்களில் ஒருசிலருக்கு சலுகைகளை கிடைக்கவில்லையே தவிர, இனப்படுகொலை நடப்பது என்பது கூறுவது தவறு.

எஸ்.வி.சேகர், அண்ணாமலை
“தமிழகத்தில் பிராமணர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்களா?..” - கஸ்தூரிக்கு எஸ்வி சேகர் அதிரடி பதில்

தமிழக பாஜகவிற்குள் தான் பிராமணர் மீது இனப்படுகொலை நடைபெறுகிறது; பிராமணர்களுக்கு திமுக நல்லது செய்யும் பட்சத்தில் திமுகவிற்கு பிரச்சாரம் செய்வேன்.

பாஜகவில் இருந்து முழுவதும் விலகிவிட்டேன். பாஜகவிலிருந்து ஒரு பிரயோஜனம் இல்லை என்பதால் விலகிவிட்டேன். தமிழக பாஜகவை நம்புவது வீண். யாரும் பாஜகவை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.

அதேபோல் மேலும் அவர் பேசிய முழு விஷயங்களை காண இந்த வீடியோ தொகுப்பை காணவும்..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com