ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை நெருக்கமானவர்களுக்கு ஒதுக்கீடு செய்த எஸ்.பி வேலுமணி?

ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை நெருக்கமானவர்களுக்கு ஒதுக்கீடு செய்த எஸ்.பி வேலுமணி?

ரூ.811 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை நெருக்கமானவர்களுக்கு ஒதுக்கீடு செய்த எஸ்.பி வேலுமணி?
Published on
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் 811 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை தமக்கு வேண்டியவர்களுக்கு எஸ்.பி. வேலுமணி ஒதுக்கீடு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், கே.சி.பி.என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ், நிறுவன இயக்குனர் ஆர்.சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எஸ்.பி.பில்டர்ஸ் அதிபர் ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பத்து நிறுவனங்கள் மற்றும் ஏழு நபர்கள் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சராக இருந்தபோது பதவியை தவறாக பயன்படுத்தி ஒப்பந்தங்களை தனது சகோதரர் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டில், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் ஆகியோர் அளித்த புகாரில் நீதிமன்ற உத்தரவின்படி முதற்கட்ட விசாரணை நடத்தப்படவுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளும் ஆராயப்பட்டதில், குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்திருப்பதால் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
2014 முதல் 2018 வரை, சென்னை மாநகராட்சியில் 464 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக வேலுமணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கோவை மாநகராட்சியில் 346 கோடியே 81 லட்சம் மதிப்பிலான ஒப்பந்தங்களை தமக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, சி.ஆர். கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்ற நிறுவனம் 6 ஆண்டுகளில், 11,363 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com